250 வறிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

250 வறிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2014 புத்தாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பரிவிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும்  250 வறிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு   காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் 01-01-2014 இன்று புதன்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.


இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்ääமாவட்ட செயலாளருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் வறிய மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்ட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ääமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்ணம்ää கா-குடி பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர் ஈ.குணரட்ணம் ää உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்ää சமூர்த்தி முகாமையாளர் உட்பட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 250   வறிய பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad