ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 2014 ஜனவரி மாதம் கடந்த 12 தினங்கள் சிறப்பாக இடம்பெற்ற  ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பயிற்சிப் பட்டறை கடந்த வாரம்  நிறைவு பெற்றதாக இலங்கையிலிருந்து அப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபு தெரிவித்தார்.


கனடாääஇங்கிலாந்துääஹொங்கோங்ääமலேசியாääநியூஸ்லாந்ääசிங்கபூர்ää சாலமன்தீவுகள்ää சௌத்தாபிரிக்காää இலங்கைääவேல்ஸ்ää அவுஸ்திரேலியா ஆகிய 11 உலக நாடுகள் பங்கு கொண்ட சர்வதேச  இப் பயிற்சிப் பட்டறையில்  பல்வேறு வகையான முதலுதவி பயிற்ச்சிகள் வழங்குவது தொடர்பான பயிற்ச்சிகள் வழங்கப்பட்டதுடன் வினோதமான முறையில் பொழுது போக்கு நிகழ்வுளும் இடம்பெற்றன.


இவ் சர்வதேச பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு  அவுஸ்திரேலியா ஸ்டாண்வேல் டொப் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற போது  சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் சார்பாக சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டு-மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபுவினால் 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பயிற்சிப் பட்டறையின் நிறைவேற்று அதிகாரி போள் கொம்டனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இப் பட்டறையின் இறுதி நிகழ்வில் இலங்கையிலிருந்து சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் கொழும்பு மாவட்ட ஆணையாளர் சரத் தயானந்தாää சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் குருநாகல் மாவட்ட உதவி ஆணையாளர் மல்லிகா ஹேரத் ää சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிப் உட்பட 15ää16ää17ää18 வயது சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவன உறுப்பினர்கள் பெற்றோர்கள் என 22 பேர் கலந்து கொண்டனர்.No comments:

Post Top Ad