மஃஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2014 புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்- (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

மஃஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2014 புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்- (படங்கள் இணைப்பு)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி - மஃஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2014 புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்
 31-12-2013 செவ்வாய்க்கிழமை மாலை மஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் அக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது கல்லூரி நாட்களில் விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வருகைதந்த 12 பன்னிரண்டு மாணவிகளும்ää முன்மாதிரிமிக்க மாணவிகளாக தெரிவு செய்யப்பட்ட மூன்று 3 மாணவிகளும்ääதேர்ச்சி அறிக்கையில் 90 தொன்;ணூற்றுக்கு மேல் புள்ளிகளை பெற்ற 15 பதினைந்து மாணவிகளும் அதிதிகளினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 2014 புதிய மாணவிகளுக்கும் அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.

மஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி உப அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.அன்ஸார் மக்கியின் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்Nதிரேலியாவில் வசிக்கும் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம்.காசிம் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக (டுபாய்) ஐக்கிய அரபு இராச்சியத்தின்  இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எம்.எம்.அப்துர் ரஹீம்ää நஸீலா பவுன்டேஸன்  நிறுவனத்தின் ஸ்தாபகத்  தலைவர் அல்ஹாஜ் ஐ.எல்.எம்.அக்பர் உட்பட மஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் செய்னுலாப்தீன் மதனிääமஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி நிர்வாக சபை தலைவர்ääசெயலாளர் ääஉறுப்பினர்கள்ääஆசிரிய ஆசிரியர்கள் ääஊர் பிரமுகர்கள் புதிய மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு மஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் திலாவதுல் குர் ஆனும் மொழிபெயர்ப்பும்ääதமிழ்ப் பேச்சுääஅறபுப் பேச்சுääகஸீதா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இக் கல்லூரியில் தற்போது 114  மாணவிகள் கல்வி பயிலுவதுடன் 2014 இவ் வருடம் 25 மாணவிகள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad