றீமா றவல்சன் டுவல்ஸ் நிறுவனத்திலிருந்து 2014ம் வருடம் ஜனவரி மாதம் 105 பேர் புனித மக்கா பயனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

றீமா றவல்சன் டுவல்ஸ் நிறுவனத்திலிருந்து 2014ம் வருடம் ஜனவரி மாதம் 105 பேர் புனித மக்கா பயனம்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில்; கடந்த 16 வருடங்களாக சுமார் 10000 பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஹஜ் உம்ரா யாத்திரிகளை மக்கா மதீனாவுக்கு அழைத்துச் சென்று மக்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாகத் திகழும் றீமா றவல்சன் டுவல்ஸ் நிறுவனத்திலிருந்து 2014ம் வருடம் ஜனவரி மாதம் 1ää2ää முதலாம் இரண்டாம் திகதிகளில் 105 பேர் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி ஏயா லைன்ஸ் விமானம் மூலம்  புனித மக்கா பயனமாகவுள்ளதாக காத்தான்குடி றீமா றவல்சன் டுவல்ஸ் நிறுவனத்த்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.செட்.எம்.றஹ்மி சுபைர் தெரிவித்தார்.


குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் எங்களது நிறுவனத்தில் ஒரு வருடத்தில் 4 நான்கு உம்ராவுக்கும் 1 ஒரு ஹஜ்ஜிக்கும் பிரயாணிகளை கூட்டிச் செல்வதாகவும் இதில் ஆண்களுக்கு ஆண் வழிகாட்டியாக எம்.சி.எம்.பௌஸ் (பலாஹியும் பெண்களுக்கு பெண் வழிகாட்டியாக ஹாஜியானி பாயிஸா சுபைரும் கூட்டிச் செல்வதாக தெரிவித்ததோடு விஷேடமாக இலங்கை முறைப்படி உணவுகளை வழங்குசதற்கு காத்தான்குடியில் சமையலில் பிரபல்யம் பெற்றுத் திகழும் அல்ஹாஜ் ஐ.எல்.உசைன் (சாஜஹான்)ääஅல்ஹாஜ் ஐ.எல்.இஸ்மாயில் ஆகிய சமையக்காரர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த ஹஜ் உம்ரா நிறுவனத்தில் விஷேடமாக பொத்துவில்ääகல்முனைääவாழைச்சேனைääஅக்கறைப்பற்றுää ஓட்டமாவடிääஏராவூர்ää  கதுருவலää கம்பளை ääதிருகோணாமலைääரிதிதென்னை போன்ற தூர  இடங்களிலிருந்து  ஹஜ் உம்ராவுக்கு செல்லும் பிரயாணிகள் இங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad