பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்      01-02-2014 சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு காத்தான்குடி -3 முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மேல் மாடியில் பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை (பலாஹி) தலைமையில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின்ää செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி தெரிவித்தார்.


இங்கு 21ம் நூற்றாண்டில் சவால்களை சந்திப்பதில் இமாம்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்மா மஸ்ஜித் பேஷ் பிரதம இமாம்  மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை (பலாஹி) சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தில் அங்கத்துவமுள்ள அணைத்து கதீப்மார் மற்றும் இமாம்களை கலந்து கொள்ளுமாறும் பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

No comments:

Post Top Ad