மூதூர் அல்-மினா பாடசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

மூதூர் அல்-மினா பாடசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

மூதூர் அல்- மினா மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றார்களும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி  இன்று திங்கட் கிழமை  கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.


இன்று காலை 8.00 மணிக்கு  பாடசாலைக்கு முன்னால் ஒன்றிணைந்த மாணவர்களும் பெற்றார்களும் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரும் பல சுலோகங்களை ஏந்தியவாறு அணிவகுத்து நின்றனர்.
இதேவேளை,பாடசாலைக்கு விஜயம் செய்த மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி பாடசாலையில் நிலவும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வைப்பெற்றுத்தருவதாக   வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் முடிவிற்கு வந்தது.

சுமார் 54 வருடங்களுக்கு முன்பு 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பாடசாலை மிகப்பழமையான  கட்டிடங்களோடே இற்றைவரை  காட்சி தருகின்றது. இங்கு 16 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் 11 பழமையான வகுப்பறைகளே காணப்படுகின்றன.

தளபாடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பௌதீக வளப்பற்றாக்குறையினாலும் கல்வி, கல்விசாரா ஆளணி வளப்பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்டுள்ள  இப்பாடசாலை கல்விப் பெறுபேறுகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பி;டத்தக்கது.No comments:

Post Top Ad