PMGG அனைத்து இன மக்களின் நன்மைக்காகவும்,சுபீட்சத்திற்காகவும் செயற்படுகிறது (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

PMGG அனைத்து இன மக்களின் நன்மைக்காகவும்,சுபீட்சத்திற்காகவும் செயற்படுகிறது (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது முஸ்லிம்களை மட்டுமன்றி அனைத்து இன மக்களதும் நன்மைக்காகவும் சுபீட்சத்திற்காகவுமே செயற்படுகின்றது. இலங்கை  மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட  நல்லாட்சி சம்பந்தமாகவே நாம் ஈடுபாடு செலுத்தி வருகின்றோம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல்றஹூமான் தெரிவித்தார்.


மூதூர் எம்என்யூ ஹோட்டலில் டாக்டர் கே.எம்.ஸாஹிர் தலைமையில்  இடம்பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒன்று கூடலின்போது கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இன்று இலங்கையிலுள்ள ஒவ்வொருவர் மீதும் தலா பல இலட்சம் ரூபாய்கள் கடனாக சுமத்தப்பட்டுள்ளது. அன்றாட பாவனைப்  பொருட்கள்; மீது திணிக்கப்பட்டுள்ள வரிகளினால் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் துயரத்திற்குள் வாழ்ந்து வருகின்றனர்.
உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளபோதும்    பணம்படைத்தவர்கள் தமது செல்லப்பிராணிகளாக பல இலட்சம் கொடுத்து வாங்கி  வீடுகளில் வளர்த்துவரும் உயர்தர நாய்களுக்குரிய தீவனத்துக்குரிய  வரியை இல்லாமற்செய்துள்ளது. அதற்கு வரியை விதிப்பதனால் அப்பணம் படைத்தவர்கள் பாதிக்கப்படப்போவதில்லை என்ற போதும் வரிவிதிக்கப்படவில்லை.

சில இடங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் மா பக்கட் ஒன்றைக் கூட  முழுமையாக  பணங்கொடுத்து வாங்கமுடியாது நாளுக்கு நாள்  கரண்டிக் கணக்கில் வாங்கி ஊட்டவேண்டிய துயரமான நிலைமையை சந்தித்து வருகின்றனர்.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கனிசமான சம்பளவேற்றம் வழங்கப்பட்டுள்ளது.இருந்தபோதும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில்  அசம்பளவேற்றத்தினால் எவ்வித நன்மையும் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.  

ஆனால்,அரசியல் வாதிகள் மக்களது எத்தகைய துயரத்தையும் கவனத்திற் கொள்ளாது ஆடம்பரமான சுகபோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரணமான ஒருவராக அரசியலுக்குள் நுழைந்தவர்கள்கூட பெரும் கம்பனிகளுக்கும் பங்களாக்களுக்கும் சொந்கக் காரர்களாக உள்ளனர். அவர்களுக்குவழங்கப்படும் சம்பளங்களிலிருந்து இது எவ்வாறு   சாத்தியப்படும்?
எனவேதான் இலங்கை மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இத்தேவையை உணர்ந்தே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டுவருகின்றது.
இவ்வொன்று கூடலில் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின்இ நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பிர்தௌஸ் நளிமிää நஜா மொகமட் ஆகியோரும் உரையாற்றினர்.









No comments:

Post Top Ad