சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் திரும்பியே பார்க்காத சில MPகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் திரும்பியே பார்க்காத சில MPகள்


கல்முனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் திரும்பியே பார்க்காத சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது உட்கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டை தனது முயற்சியாகக்காட்ட முற்படுவது வேடிக்கையானது- சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி உதவி பெறுவோர் சங்கம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் அப்பக்கம் திரும்பியே பார்க்காத சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது உட்கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டை தனது முயற்சியாகக்காட்ட முற்படுவது வேடிக்கையானதும்ää கண்டனத்திற்குமுடையதுமாகுமென சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி உதவி பெறுவோர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வமைப்பின் செயலாளர்  எம்.ஐ.ஏ. அஸீஸ் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுää

2005 ஆம் ஆண்டு சுனாமியின்போது இலங்கையில் ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்டது கல்முனைத்தொகுதியாகும். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோதும் கல்முனைத்தொகுதியில் குறிப்பாக கல்முனைக்குடிää சாய்ந்தமருதுää மருதமுனை ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படாமல் அகதி முகாம்களில் அல்லலுற்று வந்தார்கள். இவர்களுக்கு மாற்று இடங்களில் வீடமைத்துக்கொடுப்பதற்கு காணியில்லாத ஒரு பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்கள் கல்முனை மேற்குப்புறத்தில் கரைவாகு வட்டயை மண்ணிரப்பி அதில் வீடுகள் அமைத்துக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தார். இருந்தபோதிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் வயல்களை மூடும் பணிகள் முழுமை பெறாததினால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏனைய இடங்களில் கவனம் செலுத்தியதனால் கல்முனைத் தொகுதி பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் பாதியிலேயே நின்றுவிட்டன. ஒருசில இடங்களில் வீடுகள் அமைப்பதற்கான அடித்தளங்கள் மாத்திரம் போடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பல போராட்டங்களைச் செய்யவேண்டியிருந்தது. பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு முன்னால் சத்தியாக்கிரகங்களும் செய்தார்கள். காலங்கள் உருண்டோடியும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தீரவில்லை.

தேர்தலில் வாக்குப்பெற்றவர்கள் திரும்பியும் பாராத நிலையில் மக்களின் சோகக்கதை தொடர்கதையாகவே  சென்றது. இந்நிலையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்ää அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அமைச்சர் பஷீல் ராஜபக்ஸ அவர்களுடன் நடத்திய விசேட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்கள் அனைத்திற்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களே வீடுகள் அமைத்துக்கொடுத்தன. ஆனால் கல்முனைத்தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளின் பாராமுகம் காரணமாக குறித்த கால எல்லை தாண்டியதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இலங்கையில் மீள்கட்டுமான பணிகளுக்கான காலம் நிறைவு பெற்றதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

இந்நிலையில் இலங்கையில் இலங்கை அரசாங்கத்தின் நிதியைக் கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரேயொரு பிரதேசம் கல்முனைத் தொகுதி சாய்ந்தமருதுää கல்முனைக்குடிää மருதமுனைக் கிராமங்களாகும். அதுவும் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் தலையீட்டினாலேயே நடைபெற்றது. இருப்பினும் இன்னும் சில மக்கள் வீடுகள் கிடைக்காமல் இருக்கின்றார்கள்.

அதேநேரம் சாயந்தமருது வொலிவேரியன் சுனாமி  வீட்டுத்திட்டப்பகுதியில் வீடுகள் கட்டி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும் உட்கட்டமைப்பு நிர்மாணப்பணிகள் செய்ய வேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில் சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட அமைப்பான சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி உதவி பெறுவோர் சங்கம் என்ற எமது அமைப்பு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களையும் சந்தித்திருந்தோம். அவர்கள் இதுதொடர்பாக அமைச்சர் பஷீல் ராஜபக்ஸவின் கவனத்திற்குக்கொண்டுவந்து உரிய நடவடிக்கையினை எடுத்தார்கள். அதன் பின்னர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்ää பிரதியைமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதைத்தொடர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களதும்ää வை.எல்.எஸ். ஹமீட் அவர்களதும் அனுசரனையுடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை பல தடவை சந்தித்ததன் விளைவாக குறித்த உட்கட்டமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு துரிதப்படுத்தப்பட்டு தற்பொழுது 5 கோடி ரூபாய் சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீடமைப்புத்திட்டத்தின்  உட்கட்டமைப்பிற்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்மையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்டத்தை பார்வையிட வந்தபொழுது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமையை வைத்துக்கொண்டு சில பாராளுமன்ற உறுப்பினர்களும்  அந்த இடத்திற்கு விஜயம் செய்து ஏதோ தனது பணி போன்று காட்ட முற்படுவது வேடிக்கையானது.


இவர்களின் இவ்வாறான செயற்பாட்டினால் எதிர்காலத்தில் ஏனையவர்கள் உதவி செய்வதற்குத் தயங்குவார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தாமும் செய்யமாட்டோம்ää மற்றவர்களையும் செய்ய விடமாட்டோம். அதேநேரம் அதையும் தாண்டி யாராவது எதையாவது செய்தால் அதற்கு பெயர்வைக்க நாங்கள் வருவோம். என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியலாகும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad