வாஸ் குணவர்தனவின் மகன் நீதிமன்றத்துக்கு எதிரில் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

வாஸ் குணவர்தனவின் மகன் நீதிமன்றத்துக்கு எதிரில் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல்


பம்பலப்பிட்டியை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு எதிரில் அவர் நேற்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் ரவிந்து குணவர்தனவை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். ஊடகவியலாளர்கள் விற்று பிழைப்பதற்காக தம்மை படம் பிடிப்பதாகவும் பிடித்த படத்தை பெரிதாக போட்டு விற்று பிழைக்குமாறும் ரவிந்து குணவர்தன அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த குணவர்தனவின் உறவினர்களும் ஊடகவியலார்களை அச்சுறுத்தியுள்ளனர்.
அங்கிருந்த ஒருவர் சிறைச்சாலை பஸ்களுக்கு அருகில் சென்றதுடன் அதில் இருந்த வாஸ் குணவர்தனவிடம் படம் பிடிப்பவர்களால் வெளியிடப்படும் படங்களை சேகரித்து வைத்து கொள்ளுமாறு கூறியதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad