சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் -(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் -(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரில்; கடந்த 6 வருடங்களாக  கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தமாக பொது மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சிறந்த முறையில் வழங்கிவரும் சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் 29-12-2013   ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மதியம் வரை  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.


முற்றிலும் இலவசமாக இடம்பெற்ற இவ் இலவச கண் பரிசோதனை முகாமில் கண் நோயுள்ள மாணவ மாணவிகள் ääசகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தமது கண்களை இலவசமாக பரிசோதனை செய்தனர்.

சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சமீல் தலைமையில் இடம்பெற்ற இவ் இலவச கண் பரிசோதனை முகாமில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்ää சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் காத்தான்குடிக் கிளை முகாமையாளர் செட்.எம்.சஜி ääகண் பரிசோதகர்களான விஜயசேனää பெரேயராääநிஸ்கிääசமீராääசமீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் பரிசோதனை முகாமில் 250 பேர் கண்களை பரிசோதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad