சர்வதேச விசேட திறமையுடையோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 31, 2013

சர்வதேச விசேட திறமையுடையோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


(A.W.இர்பான் , பஹ்மி யூஸூப்
)


திருகோணமலை,அலஸ்தோட்டம் மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் சர்வதேச விசேட திறமையுடையோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றது.


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத  மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பைஇ  சுகாதார அமைச்சர் மன்சூர்இ மாகாணசபை தவிசாளர் ஆரியவதி கலபதி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தலைமையுரையாற்றிய கிழக்கு மாகண சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன்இ
'நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் மூன்று வீதமான இயலளவு குறைந்தவர்கள் கிழக்கு மாகாணத்திலேயே உள்ளனர். அதற்கு கடந்த  யுத்தமும் ஒர் காரணமாகிறது.

இவ்வாறானவர்களின் இயலளவை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு பணிகள் முன்னைடுக்கப்பட்ட வருகின்றன. இவற்றில் பல்வேறு பயிற்சி வகுப்புக்கள் மற்றும் உதவித்திட்டங்கள் குறிப்பிடத்தக்கது' என்றார்.No comments:

Post Top Ad