ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் ; ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் ; ஹக்கீம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் எதிர்வரும் தேர்தல்களில் அரசுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ கூட்டணியில் இணைந்து போட்டியிடாது தனித்தே போட்டியிடும் என அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பூகொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்து கொண்டு ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும்.
இன்றைய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை நேர்மையாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுத்தாலும் சில மத அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
எந்த இனமும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் அரசியலில் ஈடுபடவும் உரிமைகள் உள்ளன. இதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் கட்சியின் கொள்கை மற்றும் யாப்புக்கு இணங்க முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சுயாதீனமாகவே செயற்படும். அதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் ஹக்கீம் அரசோடு இணைந்திருக்க இன்று பல காரணங்களை கூறினாலும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பௌத்த பேரினவாத அமைப்புகள் அரசாங்கத்தின் ஆதரவை பெற்ற அமைப்புகளாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஹலால், நிகாப் ஆடை உட்பட பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் பொதுபல சேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆசியுடன் இயங்குவதாக கூறப்படுகிறது.
தேர்தல்களின் தனித்து போட்டியிடும் போது அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பிரசாரங்களில் ஈடுபடும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், தேர்தலின் பின்னர் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. கடந்த மாகாண சபைத் தேர்தல் இதனை உறுதிப்படுத்திக் காட்டியுள்ளன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், பள்ளிவாசல் உடைப்பு உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.
எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசுடன் கைகோர்த்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad