மையவாடி காணியை திருப்பித் தருமாறு கோரி முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் மாளிகாவத்தையில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

மையவாடி காணியை திருப்பித் தருமாறு கோரி முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் மாளிகாவத்தையில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடி அமைந்துள்ள காணியை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படும் நடவடிக்கைக்கு எதிராக முஸ்லிம் குழுவொன்று போராட்ட பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது.
மையவாடியின் ஒரு பகுதி காணி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி இந்த குழு மாளிகாவத்தையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
19 பேர்ச்சஸ் காணி பிரசேத்தில் உள்ள ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் உதவியுடன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சுமத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஜே.வி.பியின் மேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதமான கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.
அதிகாரிகள் தலையிட்டு பள்ளிவாசல் மற்றும் மையவாடிக்குரிய காணிகளை திரும்ப பெற்று தரும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.No comments:

Post Top Ad