அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் இல்லத்தில் விருந்துபசாரம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் இல்லத்தில் விருந்துபசாரம் (படங்கள் இணைப்பு)


2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருந்துபசாரமொன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது.


இவ்விருந்து உபசாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad