நீண்ட கால விடுமுறை விடுத்ததால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

நீண்ட கால விடுமுறை விடுத்ததால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 8 மணி முதல் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விட, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரம் நீண்ட நாட்களாக விடுமுறை விடுத்தமை, மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தாமை ஆகியவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எதிராக பதாகைகளை தாங்கியவாறு மாணவர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழத்திற்கு வெளியே கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த மாதம் 11ஆம் திகதியிலிருந்து இந்த மாதம் முதலாம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad