நானோ அல்லது நாமோ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பையும் வைத்திருக்கவில்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

நானோ அல்லது நாமோ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பையும் வைத்திருக்கவில்லை


நானோ அல்லது நாமோ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பையும் வைத்திருக்கவில்லை, அரசியல் தீர்வொன்றுக்கான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான தொடர்புகளை மட்டுமே விடுதலைப் புலிகளுடன் வைத்திருந்தோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தொடர்பு மட்டுமே தவிர வன்முறைச் சம்பவங்களுடன் எமக்கு எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
வரவு- செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளார்.
அரசு தான் விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்ததே தவிர எமக்கும் அவர்களுக்கும் தொடர்புகள் இல்லை.
2005 ஜனாதிபதி தேர்தலின்போது புலிகள் சாதகமாக செயற்பட்டதாலேயே ஆளும் தரப்பு வெற்றிபெற்றது என்பதை மறுக்க முடியுமா? என்று மேலும் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad