குச்சவெளிப் பிரதேசத்தின் தலைவர் கௌரவ ஏ.முபாறக் அவர்கள் விடுத்துள்ள செய்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

குச்சவெளிப் பிரதேசத்தின் தலைவர் கௌரவ ஏ.முபாறக் அவர்கள் விடுத்துள்ள செய்தி


(ஏ.சீ.ஹாலீத்) 

என் இதயத்தில் குடியிருக்கும் பிரதேசத்தின் உறவுகளே…!

உங்கள் ஒவ்வொருவரினதும் பெறுமதியான வாக்குகளினாலும், பெருவாரியான முயற்சிகளினாலும் பிரதேசத்தின் தலைவர் என்ற அமானிதப்பொறுப்பை நான் முதல் தடவையாகத் தேர்தலில் போட்டியிட்டபோதே எனது கரங்களில் ஒப்படைத்தீர்கள் அதற்காக முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


என்னை மக்கள் என்னநோக்கத்திற்காக தெரிவுசெய்தார்களோ அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும்பொருட்டு இரவுபகலாக பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து குறுகியகாலத்திற்குள் நானும் மக்களும் எதிர்பார்த்திராவண்ணம் பல்வேறுபட்ட அபிவிருத்திப்புரட்சிகளையும்ää மக்களின் உரிமைப்போராட்டங்களையும் எதிர்கொண்டு என்னால் 95 சதவீத வெற்றியும் பெறமுடிந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

எனது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவ்வப்போது பாராட்டியவர்களையும் பெறுமதியான கருத்துக்களை பகிர்ந்துகொண்டோர்களையும் நான் துவண்டுபோனபோது தட்டிக்கொடுத்தோர்களையும் தரமான ஆலோசனைகள் வழங்கியோர்களையும் நான் இந்தசந்தர்ப்பத்தின்போது நினைவுகூர்ந்து பாராட்டக்கடமைப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் உரிமைப்போராட்டங்களில் அவர்களும் பங்குதாரர்கள் என்று உரத்துக்கூறுகின்றேன்.

எதிர்பார்த்திரா எனது வளர்ச்சிப்பரிணாமங்களை சகித்துக்கொள்ள முடியாத சிலசமூகப் புல்லுருவிகள் எனது இலட்சியத்துடன் கூடிய அரசியல் பயணத்தில் தடைக்கற்களைப் போட்டுமகிழ்கின்றனர். என்னை பலதடவைகளில் அவமதித்து எனக்கெதிராக சமூக வலைத்தளங்களில் சேறுபூசும்படலம் தொடர்ந்துகொண்டிருப்பதனாலும் உன்மைக்குப்புறம்பான முழுப்பொய்களையும் அநாகரிகமான கட்டுக்கதைகளையும் அவிழ்த்துவிடுவதை நானும் ஒரு சாதாரண மனிதன் என்றவகையில் சிலவேளைகளில் என்னால் சகித்துக்கொள்ளமுடியாமல் உள்ளது.
என்னை ஒருநிலையில் இயங்கவிடாமல் தினமும் மனவுளைச்சலையேற்படுத்தும் தரப்பினர்களின் அற்பமான அரசியல் எதிர்பாரப்புகளுக்கிடையில் எனது நிலைப்பாட்டை பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளேன்.

என்னைமட்டுமல்ல எந்தவொரு அரசியல்வாதிகளின் நல்லநடவடிக்கைகளுக்கும் சேறுபூசும் வகையில் மிலேடசத்தனமாக நீங்கள் நடந்துகொள்ளவேண்டாம் என்று சம்மந்தப்பட்ட உங்களை வினையமாக அல்லாஹ்வுக்காக கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் அவர்களும் ஒரு சாதாரண மனிதர்கள்தான் உங்களுக்கு அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் வெறுத்துவிட்டால்  தேர்தல் காலங்களில் தகுந்த பாடம் புகட்டுங்கள்.
என்னைப் பொறுத்தளவில் இன்ஷாஅல்லாஹ் இன்னும் ஓர் ஆண்டில் நான் வகிக்கும் இந்தப்பதவியை துச்சமென துறக்கவுள்ளேன். எனக்கு தேர்தல்காலங்களைக் காத்திருக்கவேண்டிய எந்தக்கட்டாயமுமில்லை. நான் பதவியில் இல்லாதபோது எட்டமுடிந்த சாதனைகள் ஏராளம் தாராளம் அதற்கு முழுப்பிரதேசமுமே சாட்சியாகும்.


No comments:

Post Top Ad