பால்மா பக்கெற்றுக்களை பதுக்கி வைப்பவர்கள் பற்றி இந்த இலக்கங்களினூடாக அறிவிக்கவும் ; ரூமி மர்சுக் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

பால்மா பக்கெற்றுக்களை பதுக்கி வைப்பவர்கள் பற்றி இந்த இலக்கங்களினூடாக அறிவிக்கவும் ; ரூமி மர்சுக்

(tm)

பால்மாக்கள் மற்றும் சமையல் எரிவாயுகள் (காஸ்) ஆகியவற்றின் விலைகள் அங்கீகரிக்கப்படமாட்டாது என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் இந்த கோரிக்கை அரசாங்ககத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதனால் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் பொதி செய்யப்பட்ட பால்மா பக்கெற்றுக்களை பதுக்கிவைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ரூமி மர்சூக் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டின் மூலம் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப் பகுதியில் பால்மாக்களின் விலைகளை அதிகரிக்க பால்மா உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

வெலிசர பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்ட ஒரு தொகுதி பொதி செய்யப்பட்ட பால்மா பக்கெற்றுக்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இது போன்று இன்னும் பல இடங்களில் பொதி செய்யப்பட்ட பால்மா பக்கெற்றுக்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் இவை விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பக்கெற்றுக்களை பதுக்கி வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பற்றி 011-2399146 அல்லது 0717220444 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக எனக்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நாட்டின் பல பாகங்களில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, காஸ் விலைகளிலும் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad