காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மும்முரம்-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 20, 2013

காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மும்முரம்-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய  டெங்கு  கட்டுப்பாட்டு  வாரத்தினை  முன்னிட்டு காத்தான்குடி நகரசபைää  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்ää பிரதேச செயலகம் மற்றும் பொலிசார்  இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் 19.12.2013  நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.


இவ்விழிப்புணர்வு நடவடிக்கையில் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர்கள்ää பொதுச் சுகாதார பரிசோதகர்கள்ää காத்தான்குடி பொலிசார் மற்றும் கிராம சேவையாளர்கள் பங்குபற்றினர்.

இதன் போது வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன் டெங்கு நோயின் விபரீதங்கள் தொடர்பாகவும் வீட்டு உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இவ் டெங்கு  விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளதாக காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர் அர்சாட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு  விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad