பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 24, 2013

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)


மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்ää மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 11 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 3 விளையாட்டு கழகங்கள் மற்றும் 1 இளைஞர் கழகம்ää1சமூக நிறுவனம் ää 1ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


அன்பளிப்பு செய்யப்பட்ட 11 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உட்பட மற்றைய உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 23-12-2013 நேற்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில்         பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது விளையாட்டு கழகங்கள் மற்றும்  இளைஞர் கழகம் ääசமூக நிறுவனம் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் அதன் தலைவர்களிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்  ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்  ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்ää காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன் ääஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் நிறுவனத்தின்   கிழக்கு மாகாண இணைப்பாளர்களான குறைஷ்ääகரீம்ää சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ääபிரதேச செயலக  உத்தியோகத்தர்கள்ää           இளைஞர்கள் ääவிளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள்ää என  பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


No comments:

Post Top Ad