நகைகளை திருடிய கிறிஸ்துமஸ் தாத்தா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

நகைகளை திருடிய கிறிஸ்துமஸ் தாத்தா


அல்பேனியாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு நான்கு திருடர்கள் வர்த்தக வளாகத்தில் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 24ம் திகதி அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்த டிஇஜி என்ற வர்த்தக வளாகத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலானது துப்பாக்கிமுனையில் கடையின் உரிமையாளரை மிரட்டி அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களையும், நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவ்வளாகத்தின் அருகே இருந்த குப்பைத் தொட்டிக்குள் இருந்து இரண்டு துப்பாக்கிகளை கண்டெடுத்தனர்.
இதை அக்கொள்ளையர்கள் விட்டு சென்றிருக்க கூடும் என பொலிசார் சந்தேகிப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளரான புலோரியன் செரியானி தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் டிரானாவிற்கு அருகில் இருக்கும் கொசோவோவின் தெற்குப் பகுதி நகரமான பிரிஸ்ரெனில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் 3 திருடர்கள் புகுந்து கைவிரிசையை காட்டியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இக்கொள்ளை சம்பங்கள் குறித்து பத்திரிகையாளர்களாலும், கொசோவோ காவல்துறையினரின் கருத்தை அறியமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.

No comments:

Post Top Ad