போதைப் பொருள் பிசாசின் பிடியில் இருந்து நாட்டை காப்பற்ற பொதுபல சேனா போராட்டத்தை ஆரம்பித்துள்ளது ! ஞானசார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 26, 2013

போதைப் பொருள் பிசாசின் பிடியில் இருந்து நாட்டை காப்பற்ற பொதுபல சேனா போராட்டத்தை ஆரம்பித்துள்ளது ! ஞானசார


இலங்கையை பீடித்துள்ள போதைப் பொருள் என்ற பிசாசின் பிடியில் இருந்து நாட்டை காப்பற்ற பொதுபல சேனா போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
மக்களுக்கு இது குறித்து தெளிவுப்படுத்தி, பொறுப்புக் கூறவேண்டியவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுபல சேனாவின் இந்த தேசிய முக்கியத்துவமிக்க போராட்டம் கொலன்னாவ பிரதேசத்தில் முதலில் ஆரம்பிக்கப்படும். இந்த பிரதேசத்தில் முதலில் போதைப் பொருள் ஒழிக்கப்படும்.
போதைப் பொருள் விற்பனைக்கு நேரடியாக அணுசரனை வழங்கும் நான்கு முன்னணி அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.
இந்த அரசியல்வாதிகள் போதைப் பொருளை கடத்தி வரும் நபர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பொலிஸாரிடம் சிக்கியதும் அவர்களை இவர்கள் காப்பற்றி வருகின்றனர்.
நாட்டில் 30 முன்னணி போதைப் பொருள் விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை நாங்கள் அறிந்துள்ளோம். பிராடோ போன்ற ஆடம்பர வாகனங்களிலேயே போதைப் பொருள் கடத்தப்படுகிறது என்றார்.

No comments:

Post Top Ad