சபாநாயகர் வெற்றிக் கிண்ணம்: பாராளுமன்ற.உறுப்பினர்கள் அணியிடம் வீழ்ந்தது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

சபாநாயகர் வெற்றிக் கிண்ணம்: பாராளுமன்ற.உறுப்பினர்கள் அணியிடம் வீழ்ந்தது

(ad)

இம்முறை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றியீட்டியுள்ளது. 

கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அமைச்சர்கள் அணி தோல்வியைத் தழுவியுள்ளனர். 


இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அமைச்சர்கள் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

அந்த அணி சார்பாக இந்திக பண்டாரநாயக்க 73 ஓட்டங்களை குவித்தார். இதன்படி 199 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி, 6 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியிலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஒரு அணியிலும் விளையாடும் இந்தப் போட்டியில், அமைச்சர்கள் அணிக்கு மஹிந்தானந்த அளுத்கமகே தலைமை தாங்கினார். 

மேலும் உப தலைவராக பிரதியமைச்சர் சனத் ஜெயசூர்ய செயற்பட்டதோடு, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த டலஸ் அழகப் பெரும, விமல் வீரவங்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, பிரேமலால் ஜெயசேகர, இந்திக்க பண்டாரநாயக்க, ஏர்ல் குணசேகர, ஜகத் புஸ்பகுமார, ரோகித்த அபேகுணவர்த்ன, லசந்த அழகியவத்த, விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் விளையாடினர். 

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கு அர்ஜூன ரணத்துங்க தலைவராகவும் நாமல் ராஜபக்‌ஷ உப தலைவராகவும் செயற்பட்டதோடு, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லோகான் ரத்வத்தை, ஹரின் பிரணாந்து, நாரனாத் பஸ்நாயக்க, எரின் வீரவர்த்தன, திலும் அமுணுகம, கனக ஹேரத், செஹான் சேமசிங்க, நலின் பண்டார ஆகியோரும் இடம்பெற்றனர். 

No comments:

Post Top Ad