கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஜனாதிபதியின் ஆதரவுடன் தரமுயர்த்தப்படும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 14, 2013

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஜனாதிபதியின் ஆதரவுடன் தரமுயர்த்தப்படும்

(ad)

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டியது நிஜமானது எனவும் ஜனாதிபதியின் ஆதரவுடன் தரமுயர்த்தப்படும் என பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவரெத்தின தமிழ் மக்கள் தரப்பிடம் வாக்குறுதியளித்துள்ளதாக அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றியத் தலைவர் எஸ்.சசிக்குமார் தெரிவித்தார். 


பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பாக கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலகம் தரமுயர்தப்படும் என அமைச்சர் வாக்குறுதியளித்து, தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார் என அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி இப் பிரச்சனையை எப்படியாவது தீர்த்துவைக்கும்படி தனக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவரெத்தின தெரிவித்துள்ளார். 

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பான கூட்டத்தில் அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட உள்ள பிரதேச செயலக எல்லைகள் தொடர்பாக குறிப்பிட்ட வேளையில் முஸ்லீம் பிரதிநிதிகள் பாரிய எதிர்ப்பை காட்டினார்கள். 

இதன்போது பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எந்தவித அதிகாரமும் அற்ற ஒரு பிரதேச செயலாளருடனும் முழுமையான கட்டிடவசதிகளுடனும் இப் பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் உடனடியாக தரமுயர்த்தப்படுவதே தமிழர்களுக்கு இன்றைய தேவை என்பதை சுட்டிக்காட்டி 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 23 பிரதேச செயலகங்களில் இப் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படவில்லை. 

இதற்கு பிற்பாடு உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் முழு அதிகாரத்துடன் கல்முனை மாநகரசபைக்கு உட்பட்டது. எனவே இப்பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதில் எந்தவித தவறும் இல்லை எனவும் கல்முனை வாழ்தமிழ் மக்களின் அபிலாசை இதுவே என வாதிட்டார். 

இந்நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவரெத்தின இதற்கு பதிலளித்து பேசியபோது, இப் பிரதேச செயலகம் தரமுயர்தப்பட வேண்டியது உண்மையிலே நிஜமானது எனவும் தனது முடிவினை ஜனாதிபதியுடம் தெரிவித்து அவரின் ஆதரவுடன் தரமுயர்த்தப்படும் என தமிழ் தரப்பிடம் வாக்குறுதியளித்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். 

இவ் கூட்டத்தில் சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்தின, பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, அமபாரை மாவட்ட அரசாங்க அதிபர் அல்விஸ் டி சில்வா, பிரதேசசெயலாளர்கள், மற்றும் தமிழ் மக்கள் தரப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்துடன் அம்பாரை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிரதேச புத்திஜீவிகள் கலந்து கொண்டனர். 

முஸ்லிம் மக்கள் சார்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்த தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. ஹசன்அலி, கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந் நிலையில் தமிழ்மக்கள் சார்பாக பேசுவதற்கு எதிர்பார்த்து இருந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன கூட்டம் முடியும் தருவாயில் சமூகமளித்திருந்தார் என குறிப்பிட்டு ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சசிக்குமார் கையொப்பமிட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 

No comments:

Post Top Ad