எந்த பள்ளி­வா­ச­லிலும் பொலிஸார் தொழு­கையை தடை செய்­ய­வில்லை ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

எந்த பள்ளி­வா­ச­லிலும் பொலிஸார் தொழு­கையை தடை செய்­ய­வில்லை !

(vi)

தெஹி­வளை பிர­தேச பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்கொள்ளவேண்­டா­மென பொலிஸா ரால் விடுக்­கப்­பட்­டுள்ள அறிவிப்பினை மறுத்­துள்ள பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோகண, பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்ள வேண்­டா­மென கூறு­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் கிடை­யாது. அல்­லது தொழு­கை­களை தடை செவ­தற்­கான அதி­கா­ரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,
எந்த பள்ளி­வா­ச­லிலும் பொலிஸார் தொழு­கையை தடை செய்­ய­வில்லை. தெஹி­வளை பிர­தே­சத்தில் அவ்­வாறு எந்த சம்­ப­வமும் இடம்­பெ­ற­வில்லை. எனினும் கொஹு­வல பிர­தே­சத்தில்,  குர் ஆன் மத்­ர­ஸா­வாக நடத்தி வரப்­பட்ட இடம் ஒன்று தற்­போது தொழு­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­வ­தாக பெளத்த பிக்கு ஒருவர் பொலிஸில் முறைப்­பாடு அளித்­துள்ளார். அந்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ரணை செ ய்ய பெளத்த, முஸ்லிம் தரப்புப் பிரதி நிதிகளை இன்று புத்தசான மற்றும் மதவிவகார அமைச்சுக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை தவிர எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸார் பள்ளி வாசலில் தொழுகைக்கு தடை விதிக் கவில்லை என தெரிவித்தார்.

No comments:

Post Top Ad