பெருந்தெருக்களில் கவனயீனமாக செயற்படுகின்றவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 06, 2013

பெருந்தெருக்களில் கவனயீனமாக செயற்படுகின்றவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

(nf)
பெருந்தெருக்களில் கவனயீனமாக செயற்படுகின்றவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிகளுக்கு குறுக்காக காண் வெட்டுதல், கற்களை பரப்பி வைத்திருத்தல், மின் கம்பிகளை இணைத்தல் போன்ற செயற்பாடுகளினால் மரணங்கள் சம்பவித்துள்ள சந்தர்ப்பங்களைக் கவனத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இதுபோன்ற கவனயீனமான செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad