வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுமாறு கோரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுமாறு கோரிக்கை


வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றுமாறு தேசிய சுதந்திர முன்னணி, மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அந்த கட்சியின் அமைப்பின் பேரில் அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் கடிதம் மூலம் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் 23 மூன்று வருடங்கள் பூர்த்தியானது. மூன்று தசாப்தங்களாக வடக்கில் இருந்து வந்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோற்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ளது.
வடக்கின் இனவாத பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சகலரையும் அரசாங்கம் முதலில் குடியேற்றியிருக்க வேண்டியதே முதன்மையான பணியாகும்.
இது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையில் தேசிய ஜக்கியத்தை ஏற்படுத்தும் அடிப்படை தேவை என்பதை புதிதாக உங்களுக்கு கூற தேவையில்லை.

எனினும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்வதில் உரிய செயற்பாடுகளை உங்களது அமைச்சு மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்களவர்களின் குடும்பங்கள் பற்றிய உரிய புள்ளிவிபரங்கள் கூட அமைச்சிடம் இல்லாதிருப்பது பாரதூரமான நிலைமையாகும்.
இதனால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை மீள்குடியேற்றம் செய்ய நோக்கில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் விபரங்களை பதிவுசெய்ய செயலகம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், கந்தளாய் நகரங்களில் இந்த செயலங்கள் அமைக்கப்பட வேண்டும். செயலங்களில் தம்மை பதிவு செய்யுமாறு ஊடங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.
அவ்வாறு தம்மை பதிவு செய்து கொள்ளும் குடும்பங்களை அடையாளம் கண்டு உரிய வழிமுறை மூலமாக அவர்களை வடக்கில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என முஸ்ஸாமில் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

No comments:

Post Top Ad