வங்க தேசத்தில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி எதிர்க்கட்சி போராட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

வங்க தேசத்தில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி எதிர்க்கட்சி போராட்டம்


வங்க தேசத்தில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி எதிர்க்கட்சியான வங்க தேச தேசியக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சனிக்கிழமை முதல் போராட்டத்தை துவக்கியுள்ளன.


இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மறுத்துள்ள பிரதமர் ஹசீனா, திட்டமிட்ட நாளில் தேர்தல் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக நடைமுறைக்கு பங்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டமிட்டபடி ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் காஜி ரகிபுத்தீன் அஹ்மது வியாழக்கிழமை தெரிவித்தார்.
தேர்தலைக் கண்காணிக்க பிரதமர் ஹசீனா அமைத்துள்ள அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிஎன்பி கட்சியினர், கட்சி சாரா குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, எதிர்க்கட்சிகளால் புதன்கிழமை தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post Top Ad