மதுபான விடுதிக்கு நடந்தது என்ன ? (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

மதுபான விடுதிக்கு நடந்தது என்ன ? (வீடியோ இணைப்பு)


ஸ்காட்லாந்தில் மதுபான பாரில் ஹெலிகொப்டர் திடீரென விழுந்ததில் ஆறு பேர் பலியாயினர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளாஸ்கோ நகரில் புகழ் பெற்ற மதுபான விடுதியில் நேற்று முன்தினம் இரவு இசையுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது பெருத்த சத்தத்துடன் மதுபான பார் மேற்கூரையில் ஹெலிகொப்டர் மோதியது.
இதில் கூரை இடிந்து ஹெலிகொப்டர் உள்ளே விழுந்தது. அதில் இரண்டு பொலிசார் மற்றும் விமானி என மூன்று பேர் இருந்தனர்.
அவர்கள் உட்பட ஆறு பேர் இறந்தனர், 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் மேலிருந்து விழுந்த ஹெலிகொப்டர் ஏன் வெடிக்கவில்லை என்பது புரியவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன், ஹெலிகொப்டர் தாழ்வாக பறந்த சத்தத்தைக் கேட்டதாக நதியின் மறுகரையில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், ஹெலிகொப்டரின் பாகங்களைச் சேகரித்து விமான விபத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post Top Ad