இலங்­கை-­–பா­கிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி இன்று - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

இலங்­கை-­–பா­கிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி இன்று

(vi)

இலங்­கை-­–பா­கிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி இன்று ஷார்­ஜாவில் நடைபெறவுள்ளது.
 
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடர்­களில் மோது­கின்­றன.
 
இந்­நி­லையில், இரு­பது-20 தொடர் 1–-1 என சம­நி­லையில் முடி­வ­டைந்­துள்ள நிலையில் இன்று இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஒருநாள் தொடர் ஆரம்­ப­மா­கின்­றது. அந்­த­வ­கையில் ஷார்­ஜாவில் இன்று இரு அணி­களும் தொடரின் முத­லா­வது போட்­டியில் மோது­கின்­றன.
 
மத்­தியூஸ் தலை­மையில் கள­மி­றங்கும் இலங்கை அணியும் மிஸ்பா உல் ஹக் தலை­மையில் கள­மி­றங்கும் பாகிஸ்தான் அணியும் இது­வ­ரையில் 132 ஒருநாள் போட்­டியில் மோதி­யுள்­ளன. இதில் பாகிஸ்தான் 77 போட்­டி­க­ளிலும் இலங்கை 50 போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்­றுள்­ள­துடன் ஒரு போட்டி சமநிலையிலும் 4 போட்டிகள் முடிவு பெறப்படாதும் நிறைவு கண்டுள்ளன.

No comments:

Post Top Ad