மாபெரும் தொழிற்சந்தை பஷீர் சேகுதாவூத்தினால் ஆரம்பித்து வைப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 21, 2013

மாபெரும் தொழிற்சந்தை பஷீர் சேகுதாவூத்தினால் ஆரம்பித்து வைப்பு (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை அற்று இருக்கும் இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்ட ரீதியிலான மாபெரும் தொழிற்சந்தை 21-12-2013 இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும்ää உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கலந்து கொண்டு இத் தொழிற்சந்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இங்கு நிகழ்வின் சிறப்புரையை உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.ஹேமா பெரேரா நிகழ்த்தினார்.

இத் தொழிற்சந்தையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன்ää உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன்ää உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜெ.எம்.முஸ்தபா உட்பட உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் உயரதிகாரிகள்ääமாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி பல்வேறு தொழில் சார்ந்த நிகழ்ச்சி திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad