சிரியாவின் போரினால் குழந்தைகளின் தலைமுறை அழிகிறது ! ஐ.நா. அறிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

சிரியாவின் போரினால் குழந்தைகளின் தலைமுறை அழிகிறது ! ஐ.நா. அறிக்கை


சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக நாட்டில் குழந்தைகளின் தலைமுறை அழிந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை கூறுகிறது.


பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பருவத்தில் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலன் பெயருவது கடுமையான சமூக, மன, உடல் ரீதியான பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. வாழ்வதற்காக சிறு வயதிலேயே உழைக்கும் நிலைக்கு அவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள் என்று குழந்தைகளின் நலனுக்கான ஐ.நா. குழு தயாரித்த அறிக்கை கூறுகிறது.
சிரியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிப்பை விட்டு விட்டு லெபனான், ஜோர்டான் நாடுகளில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள் அன்றாட வாழ்க்கைக்காக வேலை செய்கின்றனர்.

7 வயது சிறார் கூட வேலைக்குச் செல்லும் தகவல் கிடைத்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 22 லட்சம் சிரியா அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் ஆவர். போர்க் களத்திலும், வெளிநாடுகளில் உள்ள அகதிகள் முகாமிலும் இவர்கள் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கின்றார்கள்.
3.8 லட்சம் குழந்தைகள் லெபனானில் அகதிகளாக வாழுகின்றனர். இதில் 2,440 குழந்தைகள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து தனியாக  வாழுகின்றனர். 80சதவீதம் பேர் பள்ளிக்கூடம் செல்லாதவர்கள். 20 சதவீதம் பேர் படிப்பை பாதியில் விட்டவர்கள்.

ஜோர்டானில் 2.9 லட்சம் குழந்தைகள் அகதிகளாக உள்ளனர். இதில் 1320 குழந்தைகள் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து தனித்து வாழுகின்றனர். 56 சதவீத குழந்தைகளும் பள்ளிக்கூடம் சென்றதில்லை.

No comments:

Post Top Ad