திருகோணமலையில் இனந்தெரியாதோரால் வாகனங்கள் தீக்கிரை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

திருகோணமலையில் இனந்தெரியாதோரால் வாகனங்கள் தீக்கிரை

(nf)
திருகோணமலை உப்புவெளி வில்கம் வெஹெர பகுதியில் அடையாளம் காணப்படாத சிலரால், 2 பெக்கோ இயந்திரங்களும்  டிப்பர் ஒன்றும்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
புதிதாக வாவியொன்று நிர்மாணிக்கப்படவுள்ள இடத்திற்கு நேற்றிரவு வந்த அடையாளம் காணப்படாத 7 பேர் கொண்ட குழுவால் காவலாளி  தாக்கப்பட்டு  குறித்த  வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் கடற்படை தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்
இந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை.
வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் 95 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post Top Ad