காத்தான்குடி பள்ளிவாயல் - புதிய மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு- (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

காத்தான்குடி பள்ளிவாயல் - புதிய மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு- (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி  பிரதான வீதியில் அமையப்பெற்ற ஐம்பது வருட வரலாற்றுத் தொன்மை மிக்கதும்ää பழம்பெரும் பள்ளிவாயலான அஸ்செய்யது செயின் மௌலானா பள்ளிவாயல் - புதிய மூன்று மாடிகளைக்கொண்டதும்ää நிலக் கீழ்தள வாகனத் தரிப்பிட வசதிகளைக்கொண்டதுமானதாகää பாரியளவிலான திட்டத்துடன் அமையவுள்ளது.

இப் புதிய மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 01-12-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ{பஹ் தொழுகையைத் தொடர்ந்து மஸ்ஜித் அமையவுள்ள வளாகத்தில் அஸ்செய்யது செயின் மௌலானா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் ஏம்.எம்.அப்துர் றவூப் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது முதலாவது அடிக்கல்லை காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்ääகாதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி) நட்டி வைத்தார்.

இங்கு விஷேட து ஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்ääகாதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி)ääமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்ääபள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்ääமுஹைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அமீன் (பலாஹி)ääஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி)ääகாத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்ääஉற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி யு.எல்எம்.என்.முபீன்ääகாத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி)ää அஸ்செய்யது செயின் மௌலானா மஸ்ஜித் பேஷ் இமாம் மௌலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமிää பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் சுபைர் அதன் செயலாளர் றமீஸ் ஜமாலிää கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி முஸ்தபா (பலாஹி)ää அஸ்செய்யது செயின் மௌலானா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் என பலரும்’ பிரசன்னமாயிருந்தனர்.


No comments:

Post Top Ad