ஆயுத குழுவினால் சுமண தேரர் மீது தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 21, 2013

ஆயுத குழுவினால் சுமண தேரர் மீது தாக்குதல்


ஆயுதங்களுடன் தாம் வாழ்ந்து வரும் மாளிகாவத்தை ஶ்ரீ போதிராமய விகாரைக்கு வந்த சிலர் தமக்கு தமது சங்கத்தின் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டுதப்பிச் சென்றதாக ஊவதென்னே சுமண தேரர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் வந்த இந்த குழுவினரில் ஒருவரிடம் ரிவோல்வர் ஒன்று இருந்தாகவும் அவர் கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் கப்பம் கேட்டதாகவும் சுமண தேரர் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த சுமண தேரர், விகாரையில் ஆயுதங்களையும் குண்டர்களையும் மறைத்து வைத்திருந்தாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad