இலங்கையில் பிறந்த அமெரிக்க பிரஜைக்கு டுபாயில் சிறை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 24, 2013

இலங்கையில் பிறந்த அமெரிக்க பிரஜைக்கு டுபாயில் சிறை


இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க பிரஜை ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய கலாசார விழுமியங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டமைக்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரஜை உள்ளிட்ட எட்டு பேருக்கு ஐக்கிய அரபு இராச்சிய நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
காங்ஸ்டா என்ற காணொளி ஒன்றை குறித்த நபர்கள் இணையத்தில் உலவ விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் கலாசாரத்திற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 29 வயதான ஷெசன்னி காசிம்(Shezanne Cassim) என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷெசன்னி காசிமிற்கு 2725 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகளும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad