செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடை


வவுனியா, அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடை விதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம், சிறுவர் இல்ல விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளைக் கடைப்பிடித்து நடத்தப்படவில்லை என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சிறுவர் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அந்த இல்லத்தின் நிர்வாகியான பௌத்த  பிக்கு கல்யாணதிஸ்ஸ தேரரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் வி. இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவரது சார்பில் வாதாடிய சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான இராஜகுலேந்திரா மற்றும் வி.என்.தம்பு ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இந்த வழக்குகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post Top Ad