கணவனை கோடரியால் தாக்கி கொலை செய்து மலக்குழியில் மூடிய பெண் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

கணவனை கோடரியால் தாக்கி கொலை செய்து மலக்குழியில் மூடிய பெண்


கணவனை கோடரியால் தாக்கி கொலை செய்த பெண்ணொருவர், வீட்டு மலக்குழிக்குள் மூடிய சம்பவம் வவுனியா மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
நீண்ட நாட்களாக மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்று, பூட்டிக் கிடந்ததையடுத்து, புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அயலவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துர்நாற்றம் வீசிய சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எம். சோமரட்ண தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, வீட்டு உரிமையாளரான பெண்ணை கடந்த 15ஆம் திகதி கைது செய்ததுடன் சம்பவம் தெடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பெண் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2011.11.09 அன்று இரவு குறித்த வீட்டில் வசித்து வந்த முனியாண்டி துரைச்சாமி ஆகிய தனது கணவருக்கும் வசந்தகுமாரி ஆகிய தமக்குமிடையில் சண்டை ஏற்பட்டது.
இதன்போது கணவன் வைத்திருந்த கோடரியை பறித்து கணவனை தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் மலசலக்குழியில் சடலத்தை போட்டு மூடியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற வவுனியா நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மலசலகுழியை உடைக்குமாறு பணித்து அதற்குள் உள்ள பொருட்கள் மனித உடல் எச்சங்களை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்திருந்தார்.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post Top Ad