கிழக்கு மாகாண அமைச்சுகள்,திணைக்களங்களுக் கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

கிழக்கு மாகாண அமைச்சுகள்,திணைக்களங்களுக் கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி


(முஹம்மட் நாஜி)

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண அமைச்சுகள்ää திணைக்களங்களுக் கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2013.11.03 அன்று ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 17 அணியினர் பங்குபற்றினர். கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நா.மதிவண்ணன் தலமையில் இடம் பெற்ற இப்போட்டியில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.அமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்து இப்போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து போட்டிகள் இடம் பெற்றன.


இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தை கடும் போட்டியின் மத்தியில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. இச் சுற்றுத் தொடரின் ஆட்ட நாயகனாக மாகாண கல்வித் திணைக்கள அணியின் தலைவர் இமாம் ஷாஹிப் முஹமட் நஜ்ரான் என்பவரும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக எ.ஆர்.ஸாதிக் (மா.க.தி)ää சுற்றுத் தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக ஆர்.வசந்தமோகன் (மா.சு.தி)ää சுற்றுத் தொடரின் சிறந்த பெண் வீhhங்கனையாளராக தே.சாலினி; (மா.சு.தி) மற்றும் சுற்றுத் தொடரின் சிறந்த பெண் பந்து வீச்சாளராக எம். சர்மி லக்ஷனா (மா.சு.தி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.)


No comments:

Post Top Ad