முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் பின்விளைவுகள் மிக மோசமாகும் ! பொதுபல சேனா எச்சரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் பின்விளைவுகள் மிக மோசமாகும் ! பொதுபல சேனா எச்சரிக்கை


(vi)

முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையுமென பொது பல சேனா பௌத்த  அமைப்பு எச்சரித்துள்ளது.
 
இதேவேளை, தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இலங்கையில் இடமில்லை. பிரிவினை கோருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரவிக்கையில்,
 
முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் செயற்பட்டு வருகின்றனர். 
தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியுறுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். சில முஸ்லிம் தீவிரவாதிகளின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அரசாங்கத்தினை பகைத்துக் கொள்ள கூடாது.
 
அதேபோல் சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக்கவோ முடியாது. அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad