ஒலுவில் மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர் ! முபாறக் மௌலவி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

ஒலுவில் மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர் ! முபாறக் மௌலவி

(mp)

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மானப் பணிக்காக சட்டப்படி சுவிகரிக்கப்பட்ட காணிகளின் நஷ்ட ஈட்டுத்தொகைக்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட காசோலைகள்பணம் இல்லை என திரும்பியதன் மூலம் ஒலுவில் மக்கள் திட்டமிட்ட வகையில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர்  முபாறக் மௌலவியால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ஒலுவில் மக்களிடமிருந்து துறைமுகத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என எமது கட்சி மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. இது பற்றி நாம் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தோம்.

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் மேற்படி துறைமுகம் திறந்து வைக்கப்படுவதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களால் அவசர அவசரமாக நஷ்ட ஈடு என சொல்லி காசோலைகள் வழங்கப்பட்டு மக்களின் ஆரவாரத்துடன் துறைமுகம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. இதே விழாவில் தமக்கு பணம் பெற்றுத்தந்தவர் என நம்பி ஒலுவில் மக்கள் அமைச்சர் ரஊப் ஹக்கீமை தோளில் தூக்கி கொண்டாடினார்கள். அதே போல் இன்னும் சிலர் அமைச்சர்அதாவுல்லாவின் சாதனை இது என பாராட்டினார்கள். இப்போது இம்மக்கள் துக்கத்தை கொண்டாடுகிறார்கள்.
  
ஆனால் வழங்கப்பட்ட காசோலைகளுக்கு பணம் இல்லை என இப்போது அவை திரும்பி வந்துள்ளமை ஜனாதிபதியை அவமானப்படுத்தும் செயலாக உள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்த முஸ்லிம் அமைச்சர்களால் துறைமுகத்தை திறப்பதற்கு மக்கள் முட்டுக்கட்டை போட்டு விடக்கூடாது என்பதற்காக மிகவும் திட்டமிடப்பட்டு இந்த அப்பாவி ஏழை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.

ஆகவே தொடர்ந்தும் துறைமுகத்துக்காக தமது சொந்தக்காணிகளை இழந்த ஒலுவில் மக்களை அலைய விடாமல் அவர்களுக்குரிய நஷ்டஈட்டுத்தொகையை சரியான முறையில் உடனடியாக வழங்கும்படி ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad