சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படுகின்றன. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 06, 2013

சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படுகின்றன.
நாட்டிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுகின்றன.
இதன் பிரகாரம் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படுகின்றன.

அதன் பின்னர் அடுத்த வருடத்தின் முதலாம் தவணைக்காக மீண்டும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தமிழ், சிங்கள பாடசாலைகள் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டு, மீண்டும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.
முதலாம் தவணை விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி மூடப்படுவதுடன், மீண்டும் ஏப்ரல் 16 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.
இரண்டாம் தவணை விடுமுறைக்காக தமிழ், சிங்கள பாடசாலைகள் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மூடப்படுவதுடன், மீண்டும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகள் ஜூன் மாதம் 27 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படுவதுடன், ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அனைத்து பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad