குச்சவெளிப்பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றிகொள்ளப்படுமா…….? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

குச்சவெளிப்பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றிகொள்ளப்படுமா…….?


(நேர் கண்டவர்-புல்மோட்டை எச்.எம்.முஹ்சீன்)

நாட்டின் ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் 2014ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில்  பெரியகுளம் தொடக்கம் தென்னைமரவாடி  வரையிலான நீண்ட நிலப்பரப்பையும் மிகையான வருமானத்தையும் கொண்ட குச்சவெளிப்பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிääஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்ääஅகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் தரப்பும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும் 2014ம் ஆண்டிற்கான 2013-12-17 அண்று நடைபெறவுள்ள வரவுசெலவுத்திட்டத்தின் போதான நிலைப்பாடுகள் குறித்தும் ஐயப்பாடுகள் குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிசை; சேர்ந்த  குச்சவெளிப்பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாறக் அவர்களுடனான நேர்காணலின்போது வழங்கிய பதில்கள்.


கணிசமான வருமானங்களைக் கொண்ட குச்சவெளிப்பிரதேசசபைக்கு என்னை தெரிவுசெய்ய வேண்டும் எண்ற எண்ணத்தை மக்கள் மனதினுள் விதைத்தருளிய ஏக இறைவனைப் புகழ்ந்தவனாக 2014ம் ஆண்டிற்கான பாதீட்டைப் பற்றியும்ää எமது சபை உறுப்பினர்களின் குணாதிசயங்களையும்ääஒத்துளைப்புக்களையும் பற்றிய கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

சட்டம் உருவாக்கும் அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டிருந்தாலும் சபை எனதல்ல அல்லது எமதல்ல மக்களினுடையது மக்களுக்காகவே பிரதிநிதிகள் என்ற விடயத்தை நாம் அனைவரும் ஒருபோதும் மறந்து செயற்பட்டதில்லை கடந்த 2வருடகாலமாக சபையின் வரவுசெலவுத்திட்டம் எதிர்ப்புக்கள் இன்றியே நிறைவேறியது. கௌரவ உறுப்பினர்களின் ஆலோசனைகளினதும்ää முன்மொழிவுகளினதும் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மேற்படி வரவுசெலவுத்திட்டத்தினூடாக இம்முறை பல்வேறுபட்ட அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப்படுத்தத்திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கௌரவ உறுப்பினர்களின் ஆதரவும்ääஒத்தாசையும் எமக்கு எண்றும்போல் இம்முறையும் இருக்கும் எண்ற விடயத்தில் கிஞ்சித்தும் சந்தேகமில்லாமல் திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றேன். எனது 2வருட காலத்திற்குள் ஒருபாராளுமன்ற உறுப்பினரால் செய்யமுடியாத சேவைகளை என்னால் ஆற்ற முடிந்துள்ளதற்கு கௌரவ சபை உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன்.

என்னுடன் 9 உறுப்பினர்களைளக்கொண்ட எமது சபையில் கட்சிகளுக்கப்பால்ääமதங்களுக்கப்பால் ஒவ்வொருவரினதும் கருத்துக்களையும்ääஉணர்வுகளையும் நாம் மதித்தே செயற்பட்டுவருகின்றோம். அந்த வகையில் ஒவ்வொருவரைப்பற்றியும் இந்த சந்தர்ப்பத்தில் பேசுவது பொருத்தம் எனநினைக்கின்றேன்.


கௌரவ:சல்மான்பாரீஸ்-
இவர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புல்மோட்டையில் தெரிவாகிய ஒரேயொரு உறுப்பினராவார். புல்மோட்டையின் பூர்வீகக் குடியில் பிறந்த இவர் எனது நெருங்கிய உறவினருமாவார். கடந்த 2வருடங்களாக சபையை கொண்டுசெல்வதற்கு ஒத்துழைப்புக்களை நல்கிவருவதுடன் பிரதேச சபைச்சட்டங்களை நன்கறிந்து பிரதேச அபிவிருத்திக்கு அயராது உழைக்கும் நல்லொழுக்கமுள்ள துடிப்பான இளைஞருமாவார்.


கௌரவ:பதுறுத்தீன்-
இவர் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாகிய றிசாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டுதலில் குச்சவெளிப் பிரதேசசபையில் தாம் சார்ந்த கட்சியின் புல்மோட்டையைச் சேர்ந்த ஒரேஒரு உறுப்பினராவார். சிறுவயதிலிருந்தே என்னுடன் அன்னியோன்னியமாகப் பழகிவருகின்றார். சபையின் புதியதிட்டங்களை வரவேற்பவர். புல்மோட்டையில் சமூக அபிவிருத்தி நிறுவனத்தை ஸ்தாபித்து கடந்தகாலங்களில் மக்களுக்கு பல்வேறுபட்ட பணிகளையாற்றியுள்ளார். தற்பொழுது இலங்கை மின்சார சபை ஊழியராக இருந்துகொண்டு தனது கடமைகளுக்கப்பால் மக்கள் பணியாற்றிவருகின்றார்.


கௌரவ:ஆசிக் மொஹமட்-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மூத்த போராளியான குச்சவெளியைச் சேர்ந்த இவர் சகலருடனும் சகஜமாகப்பேசும் ஒழுக்கமுடையவர். சபை அமர்வுகளில் நயமாகப்பேசி காரியம் சாதிக்கும் கைங்கரியம் இவரிடமுள்ள தனிச்சிறப்பாகும். முழுப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும்ää உரிமைக்குமாக விடாமுயற்சியுடன் ஆரம்பகாலந்தொட்டு உழைத்துவருபவர். நமது பிரதேசம் கண்ட நல்லதொரு பேச்சாளருமாவார்.

பிரதேசத்தின் மாகாணசபை உறுப்புரிமை இளக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் மாகாணசபை வேட்பாளர் என்ற சந்தர்ப்பத்தை இரண்டு தடவைகளில் துச்சமாக மதித்து திறந்த பரந்த மனதுடன்  புல்மோட்டைப் பிரதேசத்திற்கு விட்டுக்கொடுத்ததன் பயனாக பிரதேசத்தின் மாகாணசபை உறுப்புரிமையை பாதுகாத்த பெருமையும் இவருக்குண்டு.


கௌரவ:சலாஹூதீன்- 
 இறக்கக்கண்டிப் பகுதியில் இருந்து எமது சபைக்குத்தெரிவாகியவர் சிறந்த  பிரதேசத்தின் பிரபல வர்த்தகருமாவார். எமது சபையின் முன்னாள் பிரதித் தவிசாளராக இருந்துள்ளதால் தற்போது சபைக்கும்ääஎனக்கும் தனது அனுபவங்களையும் தகுந்த ஆலோசனைகளையும் அவ்வப்போது வழங்கிவருவதுடன் சபையில் துணிச்சலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசி தனது பகுதி அபிவிருத்தியில் அக்கரையுடன் செயற்படுபவர்.


கௌரவ:மொஹமட்ஜெனா- 
நிலாவெளியைச் சேர்ந்த இவர் குச்சவெளிப்பிரதேசசபையின்  ஐக்கியதேசியக் கட்சியைச்சேர்ந்த ஒரேயொரு உறுப்பினராவார். தமது பகுதி அபிவிருத்திக்காக சபையில் வாதாடுவதுடன் மனந்திறந்து மக்களுடன் பழகும் சுபாவமுள்ளவர் சபையின் சிறந்த நடவடிக்கைகளுக்கு கட்சி பாராட்டாமல் துணைநிற்பதுடன் பல புதிய திட்டங்களை சபையில் முன்மொழிபவர். இனப்பற்றுடன் செயற்படும் இவர் கல்வியில் அக்கரையுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்.


கௌரவ:புஷ்பகாந்தன்-
கும்புறுப்பிட்டியைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எமது சபையின் எதிர்கட்சி உறுப்பினரான இவர் சகோதர இனத்தைச் சேர்ந்தவரானாலும் சகலரையும் மதித்து சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் தமது உரிமைகளை மெல்லினமாகப் பெற்று தாம் சார்ந்த சமூகத்திற்கு வழங்குபவர். சபை எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு வழங்குபவர்.தொழில் நுட்ப அறிவுபெற்றவர்.


கௌரவ:நிமலரூபன்-
கோபாலபுரத்தைச் சேர்ந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எமது சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான இவர் தமிழ் முஸ்லிம் உறவைப் பேணிநடப்பவர் தமது கோரிக்கை நிறைவேறும்வரை வாதாடுபவர் எப்பொழுதும் தம்இனத்தின் உரிமை பற்றி சிந்திப்பவர். சபையின் கௌரவத்தை கட்டிக்காத்து மக்களின் தேவையறிந்து சேவையாற்றுபவர் எப்பொழுதும் எனக்கு நம்பிக்கைக்குரியவர்.


கௌரவ:தௌபீக்-
புல்மோட்டையைச் சேர்ந்த இவர் எமது சபையின் முன்னாள் தவிசாளரும் இந்நாள் பிரதித்தவிசாளருமாவார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டுத் தெரிவுசெய்யப்பட்டவர். வேட்பாளர் தெரிவில் இவரது பலத்த எதிர்ப்புக்களுக்கு நான் முகங்கொடுக்கவேண்டியேற்பட்டபோதிலும் இறைவனின் துணையுடன் பெருவாரியான மக்களின் பலமான ஆணையுடன் நான்  வெற்றியீட்டியும் கடமைபொறுப்பேற்கும் வைபவத்தை குழப்பும் வகையில் மிலேட்சத்தனமாகச் செயற்பட்டார். நான் பதவியேற்ற விடயத்தை சகித்துக்கொள்ள முடியாமல் சட்ட விரோதமாக நான் கடமைப் பொறுப்பேற்றதாக மெட்றோநியூஸ் பத்திரிகைக்கு பொய்யான செய்தியொன்றையும் அனுப்பியுள்ளார்.

கடந்த 2வருடத்திலும் எனது தலைமைத்துவத்தை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் நெருக்குவாரங்களையே ஏற்படுத்திவருகின்றார் கடந்த காலங்களில் இவர் தவிசாளராக இருந்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடிந்துள்ளது. நான் தவிசாளராக பதவிவகிக்கும் தற்போதைய சந்தர்ப்பத்தில் தன்னிலை மறந்து தானும் ஒருதவிசாளராக இயங்குவதற்கு பலதடவைகள் முற்பட்டது நகைப்புக்குரியதாகும். இதுவரையிலும் சபையின் நல்லதிட்டங்கள் எதனையும் இவர் ஏற்றுக்கொண்டதில்லை. இவரது முன்மொழிவுகள் யாவும் தென்னமரவாடிப் பிரதேசத்தையே சார்ந்ததாகும்.

2014ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான குழுத்தலைவராக இவரை நியமித்திருந்தபோதிலும்கூட எந்தப்பங்களிப்பும் செய்யாது செயற்பட்டார். இவர் தவிசாளராக இருந்த சபையில் பொறுப்புவாய்ந்த பதவியொன்றில் நான் இருந்தபோது என்னை 13 தடவைகளுக்கு மேல் இடமாற்றம் செய்து அதில் படுதோல்வியும் அடைந்தார் இவர் என்னிடம் புதிதாகத் தோற்கவில்லை தற்பொழுதும் பாதீட்டை தொல்வியுறச்செய்வதும்  இவரது திட்டமாகும்.

வரவுசெலவுத்திட்ட நிகழ்வின்போது எவ்வாறு நடந்து கொள்ள வெண்டுமென்று எமது கட்சியின் செயலாளரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டநிலையில் அவர் விரும்பியோ விரும்பாமலோ பாதீட்டுக்கு ஆதரவாகவே வாக்கழிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளார்.

No comments:

Post Top Ad