யெமன் திருமணக் குழுவினர் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 14, 2013

யெமன் திருமணக் குழுவினர் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்

(tho)

யெமனில் திருமணக்குழுவினர் சென்ற வாகனத்தின் மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய அக்கிரம தாக்குதலில் 17 மக்கள் அநியாயமாக பலியாகினர். யெமனின் மத்திய நகரமான ரதாஇல் வியாழக்கிழமை இரவு அமெரிக்காவின் இரண்டு ஏவுகணைகள் தாக்கின. 


கொல்லப்பட்ட அனைவரும் சாதாரண மக்கள் என்றும், இவர்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் யெமனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானுக்கு பிறகு அமெரிக்கா அதிகமாக ட்ரோன் தாக்குதல் நடத்தும் நாடு யெமனாகும். அல்காயிதாவை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா கூறிவந்தாலும் தாக்குதல்களில் அதிகமாக சாதாரண மக்களே கொல்லப்படுகின்றார்கள் என்று குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது. 

No comments:

Post Top Ad