ஒட்டு கேட்கும் அமெரிக்காவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

ஒட்டு கேட்கும் அமெரிக்காவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை


அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிலையம் பாரிய அளவில் தொலைபேசி தகவல்களை சேகரித்தமை அரசியலமைப்புக்கு முரணாணது என அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்பளித்துள்ளது.

உளவு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமான தலையீடு என வொஷிங்டன் டி சி நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான எட்வோர்ட் ஸ்னோடன்டன் வெளியிட்ட ஆவணங்களில் தொலைபேசி அழைப்புத் தகவல்கள் சேகரிக்கப்பட்டமை தெரியவந்திருந்தது.
கன்சர்வேட்வ் செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பிலேயே வொஷிங்டன் டி சி பெட்ரல் நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை இரகசிய ஆவணங்களை கசிய விடுவதை ஸ்நவ்டன் நிறுத்துவாராயின் அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை வெள்ளைமாளிகை நிராகரித்துள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் தொலைபேசி அழைப்புக்களை அமெரிக்க பாதுகாப்பு நிலையம் ஒட்டுக்கேட்டமை அமெரிக்காவிற்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad