சீனாவில் நிகழ்ந்த அதிசயம்: இழந்த கரம் மீண்டும் இணைக்கப்பட்டது (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

சீனாவில் நிகழ்ந்த அதிசயம்: இழந்த கரம் மீண்டும் இணைக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)


சீனாவில் துண்டான வாலிபரின் கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய்(வயது 20).
இவர் கடந்த நவம்பர் மாதம் 10ம் திகதி தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாய் இயந்திரத்தினுள் இவரின் வலது கையை மாட்டி கொண்டு தூண்டானது.
இதனால் வலியேற்பட்டு தாங்கமுடியால் அவர் கூச்சலிட்டரார். அச்சத்ததை கேட்டு மற்ற தொழிலாளர்கள் அங்கு விரைந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவத்தில் துண்டான அவரின் கை ஒன்று காலுடன் செயலடைய செய்வதற்காக ஒரு மாத காலம் ஒட்டப்பட்டது.
நல்ல செயலாற்ற முன்னேற்றத்தை கண்ட பின் அக்கரத்தை காலிருந்து பிரித்து ஆபரேஷன் மூலம் வலது கை இருக்கும் பகுதியில் இணைத்தனர்.
தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கை திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


No comments:

Post Top Ad