கலவர பூமியாக மாறிவரும் தெற்கு சூடான் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

கலவர பூமியாக மாறிவரும் தெற்கு சூடான்


தெற்கு சூடானில் கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது. அதிபர் சல்வா கிர் படையினருக்கும், முன்னாள் அதிபர் ரீக் மச்சார் ஆதரவாளர்களுக்குமிடையே நடைபெற்று வரும் சண்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் உயிருக்குப் பயந்து வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். 


இதையடுத்து அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா. அறிவுறுத்தியது. எனினும் தொடர்ந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அங்கு அமைதிப்படையை அனுப்ப ஐ.நா. முடிவு செய்தது. இதற்கு ஆதரவாக 15 நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் வாக்களித்தது. 

அதன்படி ஐ.நா. அமைதிப்படையின் முதல் குழு தெற்கு சூடானை வந்தடைந்தது. காங்கோ குடியரசு நாட்டில் இருந்து புறப்பட்ட இந்த படையில் 72 போலீசார் இடம்பெற்றிருந்தனர். இன்று மேலும் அதிக வீரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 6000 படையினர் வரை தெற்கு சூடான் அமைதிப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக ஐ.நா. அமைதிப்படை செய்தித் தொடர்பாளர் கிரன் டிவையர் கூறுகையில், “டிசம்பர் 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும் சண்டையில் 63 ஆயிரம் மக்கள் குடிபெயர்ந்து ஐ.நா. முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணிகளில் வங்கதேச போலீசார் முக்கிய பங்கு வகிப்பார்கள்” என்றார்.

No comments:

Post Top Ad