கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் இலங்கைக்கு எதிராக ஐ.நாவுக்கு உதவுகிறது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் இலங்கைக்கு எதிராக ஐ.நாவுக்கு உதவுகிறது

(vi)

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னரும் அமைச்சர் திஸ்ஸ விதா­ர­ணவும் சர்­வ­தே­சத்­துடன் இணைந்து இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு துணை போகின்­றனர் எனக் குற்றம் சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழுவில் எமக்­கெ­தி­ரான பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தோடு சர்­வ­தேச விசா­ர­ணையும் நிச்­சயம் இடம்­பெறும் என்றும் அவ்­வி­யக்கம் தெரி­வித்­தது.
 
இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,
 
அர­சாங்க அதி­கா­ரிகள் அதுவும் தமிழ் அதி­கா­ரிகள் மூல­மாக வடக்கில் குடி­சன மதிப்­பீடு மேற்­கொள்­ளப்­பட்­டது. எனவே அதன் புள்ளி விப­ரங்கள் பிழை­யாக இருக்­காது. ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­பன இந்தப் புள்ளி விப­ரங்­களில் உண்மைத் தன்மை இல்­லை­யென்­கின்­றன. இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றோம். கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் இம் முயற்­சி­யா­னது இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா.வுக்கு உதவி செய்­வதே ஆகும்.
 
அது மட்­டு­மல்­லாது கூட்­ட­மைப்பு வடக்கில் சாட்­சி­யங்­களை திரட்டி அறிக்­கை­யொன்றை தயா­ரித்­துள்­ளது. இதில் அடங்­கிய காணாமல் போன­வர்கள் கொலைகள் தொடர்­பான தக­வல்­களில் உண்­மை­யில்லை. இவ்­வாறு இலங்­கைக்கு எதி­ராக தயா­ரிக்கும் அறிக்­கையை கன­டா­வி­லுள்ள புலம்­பெயர் தமி­ழர்கள் ஊடாக மார்ச்சில் நடை­பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் சமர்ப்­பிக்கப் போகின்­றனர்.
 
இதற்கு அரசின் பங்­கா­ளி­க­ளாக இருக்கும் முஸ்லிம் காங்­கி­ரஸும் துணை போகின்­றது. இது தேச விரோ­த­மாகும். அரசில் இருந்­தாலும் இல்­லா­விட்­டாலும் தேசத் துரோ­கத்­திற்கு துணை போகக்­கூ­டாது.
 
அது மட்­டு­மல்­லாது அமைச்சர் திஸ்ஸ விதா­ர­ணவும் சர்­வ­தேச பொரு­ளா­தார தடை வரும் என்­கிறார். இந்த முக்­கூட்டும் இணைந்து இலங்­கையில் பிரி­வினை வாதத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சிக்கு துணை போகின்­றனர்.
 
இது தோற்­க­டிக்­கப்­பட வேண்டும். அதே­வேளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் எமக்­கெ­தி­ரான பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டு­வதும் சர்­வ­தேச விசாரணையும் நிச்சயமாகும். ஆனால், அதற்கு முகம் கொடுப்பதற்கு அரசு தயாராகுவது தெரியவில்லை. இதுவரையில் எதுவிதமான நிலைப்பாட்டையும் எடுக்க வில்லை என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

No comments:

Post Top Ad