இலங்கையில் வசிக்கும் பல்வேறு மதத்தினருக்கும் உரிய சுதந்திரம் வழங்கப்படுகிறதா ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

இலங்கையில் வசிக்கும் பல்வேறு மதத்தினருக்கும் உரிய சுதந்திரம் வழங்கப்படுகிறதா ?


இலங்கையில் வசிக்கும் பல்வேறு சமூகத்தினர் மற்றும் மதத்தினருக்கும் உரிய சுதந்திரம் வழங்கப்படுகிறதா என்பதை விசாரணை செய்ய அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்ட விசேட குழுவை நியமித்துள்ளது.
இலங்கையில் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக பலவந்தமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்தே அமெரிக்கா இந்த விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
டெனி டேவிஸ் மற்றும் பில் ஜோன்சன் ஆகியோரின் இணைத்தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவில் முதல் கூட்டம் எதிர்வரும் புதன் கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கையின் இன, மத சுதந்திரம் தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்கா முதல் முறையாக இப்படியான குழுவொன்றை நியமித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

No comments:

Post Top Ad