ஊடகவியாலாளர் நூர்தீனை நலம் விசாரிக்கச் சென்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

ஊடகவியாலாளர் நூர்தீனை நலம் விசாரிக்கச் சென்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு –கல்முனை நாவற்குடா பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும்ää சிரேஷ்ட ஊடகவியாலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீனை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று 30-11-2013 சனிக்கிழமை இரவு அவரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.


இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் றுஸ்வின்ääகாத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் ஊடகவியாலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி)ää சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.ரி.அப்துல் லத்தீப்ää பாடசாலைகளின் அதிபர்கள்ääஊர் பிரமுகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை சிரேஷ்ட ஊடகவியாலாளர் நூர்தீனை நலம் விசாரிக்க அவரின் வீட்டுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்ääமுன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும்ääநல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினருமான  பொறியியலாளர் அப்துர் றஹ்மான் ääகிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கிட்னன் கோவிந்தராஜாääமட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் றம்ழான்ääகாத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்ääமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜியார்  உட்பட உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad